கல்கி 2898 AD.. அஸ்வத்தாமனாக அமிதாப்பச்சன்… புனித நகரில் பர்ஸ்ட் லுக் வெளியீடு…என்ன காரணம்?

Apr 22, 2024 - 21:33
கல்கி 2898 AD.. அஸ்வத்தாமனாக அமிதாப்பச்சன்… புனித நகரில் பர்ஸ்ட் லுக் வெளியீடு…என்ன காரணம்?

கல்கி 2898 AD திரைப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ள அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ மத்திய பிரதேசத்தில் உள்ள புனித நகரில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக பிரமாண்டமாக உருவாகியுள்ளது 'கல்கி 2898 AD' திரைப்படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், துல்கர் சல்மான் உட்பட இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.  மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கடந்தாண்டு வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. 
 
இந்த நிலையில் கல்கி 2898 AD திரைப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ள அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான நினைவுச் சின்னங்கள் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. இந்த இடத்தில் இடத்தில் அமிதாப்பச்சனின் அறிமுக வீடியோவை வெளியிட்டதற்கு முக்கிய காரணம், மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரின் மகனாக வரும்  அஸ்வத்தாமன் நெமாவாரிலுள்ள 'நர்மதா காட்'  என்னும் இடத்தில் இன்றும் நடமாடுவதாக நம்பப்படுவதால் தான்.  
 
இந்த நிகழ்வு குறித்து நடிகர் அமிதாப்பச்சன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தரமான தயாரிப்பு.. நேர்த்தியான முறையில் செயல்படுத்தும் திட்டம்.. நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாதது'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  
 
புராணமும் தொழில்நுட்பமும் கலந்து ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் இந்தாண்டு வெளியாக உள்ள நிலையில், அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow