பேஸ்புக் விளம்பரத்தால் ரூ.55 லட்சம் இழந்த வங்கி ஊழியர் - இளைஞர் கைது

டெல்லியில் இருக்கும் மோசடி கும்பலுக்கு தகவல்களை அடிக்கடி பரிமாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Feb 13, 2024 - 07:35
Feb 13, 2024 - 08:20
பேஸ்புக் விளம்பரத்தால் ரூ.55 லட்சம் இழந்த வங்கி ஊழியர் - இளைஞர் கைது

பேஸ்புக் விளம்பரம் மூலம் நூதன முறையில் தனியார் வங்கி ஊழியரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பகுதி நேர வேலை வாய்ப்பிற்காக முயற்சித்து வந்ததாகத் தெரிகிறது. அப்போது ஃபேஸ்புக்கில் விளம்பரத்தைப் பார்த்து பிட்காயின் டிரேடிங் வாய்ப்புள்ளது என கூறியதை நம்பி டெலிக்ராம், வாட்ஸப்பில் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்துள்ளார். இந்த வலைதளங்களில் மோசடி கும்பலிடம் சாட் செய்த பாலமுருகன், அவர்கள் கூறிய பல வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சொல்லியுள்ளனர். மேலும் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு லாபத்தொகை உங்கள் வங்கிக்கு உடனுக்குடன் அனுப்பப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பாலமுருகன் 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.ஆனால் சொன்னபடி அவருக்கு லாபத்தொகை ஏதும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் உதவி எண் 1930 மூலம் புகார் தெரிவித்துள்ளார். புகாரினை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த எந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதோ அனைத்தையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணையில், அது சென்னை அடுத்த ஊரபாக்கம் பகுதியைச் சேர்ந்த டோமனிக் என்பவருக்குச் சொந்தமான தனியார் வங்கி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.

டோம்னிக் இதுபோன்று சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு உள்ளது எனக் கூறி விளம்பரம் செய்து அதைப் பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களை ஆசைவார்த்தை கூறி பணம் பறித்துள்ளார். மேலும் டெல்லியில் இருக்கும் மோசடி கும்பலுக்கு தகவல்களை அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து பிட்காயின் வியாபாரம் எனக்கூறியதை நம்பி 55 லட்ச ரூபாயை இழந்த தனியார் வங்கி ஊழியரின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow