“ச்ச்சீ நீ எல்லாம் ஒரு அம்மாவா”  மயக்க மாத்திரை கொடுத்து மகளை கள்ளக்காதலுனுக்கு விருந்தாக்கிய தாய்

சென்னை வடபழனியில் பெற்ற மகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய் மீது  வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

“ச்ச்சீ நீ எல்லாம் ஒரு அம்மாவா”  மயக்க மாத்திரை கொடுத்து மகளை கள்ளக்காதலுனுக்கு விருந்தாக்கிய தாய்
மகளை கள்ளக்காதலுனுக்கு விருந்தாக்கிய தாய்

சென்னை வடபழனியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தாய், தந்தையும் வசித்து வருகிறார். அவரது தந்தை காவலாளியாக பணியாற்றி வருவதால் அடிக்கடி வீட்டிற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண்ணின் தாயாருக்கும் தட்சணாமூர்த்தி (50) என்பவருக்கும் தவறான உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அந்த இளம்பெண்ணுக்கு தெரிந்ததால் தாயாருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் கடந்த ஐனவரி மாதம் அந்த இளம்பெண்ணிற்கு உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்த போது தாயார் மாத்திரை கொடுத்ததாக தெரிகிறது. மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி தட்சணாமூர்த்தி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த பிறகு உடல் மிகவும் வலி இருந்தது குறித்து தாயாரிடம் தெரிவித்த போது அது ஒன்றுமில்லை என்று கூறியதாக தெரிகிறது. பிறகு அதே ஜனவரி மாதத்தில் மீண்டும் தாயார் மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போதும் அந்த பெண்ணை தட்சணாமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு அந்த பெண் தனது தாயாருடன் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.

திருவண்ணாமலைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த பெண் நடந்ததை தனது பெரியம்மாவிடம் கூறியதாக தெரிகிறது. பிறகு அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் செய்யாறு காவல் நிலையத்தில் தனது தாயார், தட்சணாமூர்த்தி மீது புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்தது வடபழனி என்பதால் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் தாயார், தட்சணாமூர்த்தி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow