ஜனநாயகன் சென்சார் விவகாரம்:விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி எக்ஸ் பதிவு 

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளம்பி உள்ளது.

ஜனநாயகன் சென்சார் விவகாரம்:விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி எக்ஸ் பதிவு 
விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி - எக்ஸ் பதிவு  gemini Ai

தவெக கட்சியை தொடங்கியுள்ள விஜய் தனது கடைசி படமான ஜனநாயகனில் நடித்துள்ளார். ஜனவரி 9-ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து, தேதியையும் அறிவித்து இருந்தது. ஆனால் சென்சார் போர்டு படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வந்ததது. 

இதனால் 9-ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக வில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் படக்குழவினர் தாக்கல் செய்தனர். ஆனால் ஜனவரி 21-ம் தேதி வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை படக்குழு நாடி உள்ளது. வரும் 15-ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. 

ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தலைவர் உள்பட எம்பிக்கள் மத்திய பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.  இந்நிலையில், ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். பிரதமர் மோடி அவர்களே தமிழ் மக்களின் குரலை நசுக்குவதில் நீங்கள் வெற்றிபெற முடியாது. எனவும் எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். 

ராகுல்காந்தியின் பதிவுக்கு தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் ஆகியோர் வரவேற்று உள்ளனர். தவகெ, காங்கிரசு கூட்டணி பேச்சுவார்த்தை திரைமறைவில் நடைபெற்று வருவதாக தகவல் பரவி வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக ராகுல்காந்தி பதிவிட்டு இருப்பது திமுக கூட்டணியில் புகைச்சலை கிளப்பி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow