திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீதான வழக்கு... காவல்துறை மெத்தனம் - நீதிபதி அதிருப்தி

Feb 28, 2024 - 16:27
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீதான வழக்கு... காவல்துறை மெத்தனம் - நீதிபதி அதிருப்தி
திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள்

சென்னை பல்லாவரத்தில் பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்எல்ஏ மகன், மருமகன் ஜாமின் மனு மீனுவை நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

தனது வீட்டில் பனியாற்றிய பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன்,  அவரது மனைவி மர்லினா  ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்  கீழ் பதியப்பட்ட வழக்கில்  கடந்த ஜனவரி 25ம் தேதி  கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதாடினார். பாதிக்கப்பட்ட பணிப்பெண் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை என்றும், புகாருக்கு உள்ளான இருவரிடமும் விசாரணை கூட நடத்தவில்லை எனவும் தெரிவித்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதனை கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுக்கு காவல்துறை பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் பிரதாப், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி,  இது போன்ற தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் காவல்துறை ஏன் இவ்வளவு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது என கண்டித்தார். இதனையடுத்து, நாளை மறு தினத்துக்குள் பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,  அன்றைய தினம் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow