புத்தாண்டில் போராடிய இடை நிலை ஆசிரியர்கள் : வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போலீசார் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6-வது நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.
சென்னை எழும்பூரில் காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட சொல்லி இடைநிலை ஆசிரியர்களிடம் போலீசார் நடத்தி பேச்சுவார்த்தை சமரசம் ஏற்படத்தால், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
What's Your Reaction?

