தமிழக வெற்றிக் கழகம் : 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  உறுப்பினராக இணைந்ததாக தகவல்

வாருங்கள்! தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் - விஜய்

Mar 8, 2024 - 21:50
Mar 8, 2024 - 21:52
தமிழக வெற்றிக் கழகம் : 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  உறுப்பினராக இணைந்ததாக தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான QR CODE-ஐ அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச் 7) மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய அணியை உருவாக்கி அதற்கான நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். 

இந்நிலையில், இன்று (மார்ச் 8) கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான QR CODE-ஐ அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். மேலும், முதல் உறுப்பினராக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி மொழியைப் படித்து உங்களுக்கு பிடித்திருந்தால், விருப்பப்பட்டால் கட்சியில் இணையுங்கள் ப்ளீஸ்" என கூறியுள்ளார்.  மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாருங்கள்! தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம்" எனவும் கூறியுள்ளார்.

 https://x.com/tvkvijayhq/status/1766072483848003858?s=20

இதையடுத்து விஜய் ரசிகர்கள் QR CODE-ஐ பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உறுப்பினர் அட்டையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முதல் நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் சிறிது நேரம் QR CODE முடங்கியதாகவும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow