GOAT: தாறுமாறாக வெளியான தி கோட் க்ளிம்ப்ஸ்... விஜய்யின் தரமான Birthday ட்ரீட்... அத கவனிச்சீங்களா?
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு கமல்ஹாசன், பிரபுதேவா, சீமான் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் ப்ராஜெக்ட்டாக உருவாகி வரும் கோட் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனை இன்னும் எகிற வைக்கும் விதமாக கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் மெர்சலான பைக் சேஷிங் சீன் உடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸில், இரண்டு விஜய் இணைந்து சம்பவம் செய்கின்றனர். முக்கியமாக விஜய் தவிர மற்ற ஹீரோக்கள் யாரும் ஸ்கீரினில் வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளது.
அதேபோல், ஒரு சீனில் “PEAK OF 11 BILLION BY 2050” என்ற வாசகம் டிவியில் தெரிகிறது. இதனால் கோட் திரைப்படம் எந்த மாதிரியான ஜானரில் உருவாகி வருகிறது என்பதை கணிக்கவே முடியவில்லை என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இது டைம் ட்ராவல் மூவியா அல்லது ரஷ்யாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக உருவாகியுள்ளதா என பெரிய விவாதமே நடத்தி வருகின்றனர். அதேநேரம் இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளது மட்டும் கன்ஃபார்மாகியுள்ளது. இன்று மாலை வெளியாகும் கோட் செகண்ட் சிங்கிளில் மேலும் சில அப்டேட்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக கோட் படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரின் கேரக்டர்கள் எப்படி இருக்கும் என்பதும் ரசிகர்களுக்கு பெரிய ஹைப் கொடுத்துள்ளது. இதுவரை வெளியான தகவல்களின் படி மோகன் தான் கோட் படத்தின் வில்லன் என சொல்லப்படுகிறது. ஆனால், இதிலும் யாரும் எதிர்பார்க்க முடியாத ட்விஸ்ட் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகிவிட்டது. அடுத்து செகண்ட் சிங்கிளுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த இரண்டு மட்டுமில்லாமல் இன்னொரு சர்ப்ரைஸ் அப்டேட் ஏதும் வெளியாகுமா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?