காதலிக்கு ஆபாச மெசேஜ்.. ரசிகர் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிக்க துடிக்க கொன்ற நடிகர் தர்சன். பகீர் ரிப்போர்ட்

கன்னட திரை உலக அதிர வைத்திருக்கிறது தர்சன் தூகுதீபாவின் கைது. ரசிகரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தற்போது சிறை கம்பியை எண்ணிக்கொண்டிருக்கிறார் தர்சன்.

Jun 17, 2024 - 11:12
காதலிக்கு ஆபாச மெசேஜ்.. ரசிகர் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிக்க துடிக்க கொன்ற நடிகர் தர்சன். பகீர் ரிப்போர்ட்

தனது காதலியை  சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக திட்டினார் ஆபாச மெசேஜ்களை காதலிக்கு அனுப்பினார் என்பதற்காக ரசிகரை கொடூரமாக கொன்று தற்போது சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் நடிகர் தர்சன். கூடவே அவரது காதலி பவித்ரா கவுடாவும் சிறைக்கு சென்றுள்ளார். சினிமாவை மிஞ்சிய இந்த கொலை வழக்கும் அதற்கான பின்னணியும் கன்னட திரை உலகை அதிர வைத்துள்ளது.                                        

சேலஞ்சிங் ஸ்டார் தர்சன் தூகுதீபா. கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது ரசிகர்களால் ‘சேலஞ்சிங் ஸ்டார்’, ‘தி பாஸ்’ என  அழைக்கப்படுகிறார். சினிமா குடும்பத்தைச் சேர்ந்த இவர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன். தூகுதீபா ஸ்ரீனிவாஸ்  வில்லன் கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர். 1990களின் நடுவே தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் தர்ஷன். 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மெஜஸ்டிக்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார். அதன் பிறகு கரியா (2003), கலாசிபால்யா (2005), கஜா (2008), நவகிரகம் (2008), சாரதி (2011), புல்புல் (2013), கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா (2012), குருக்ஷேத்ரா (2012), யஜமானா (2019), ராபர்ட் (2021) மற்றும் காடேரா (2023) என அவர் நடிப்பில் வெளியான இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் தர்ஷனுக்கும், விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் இருக்கிறார். அதேசமயம், தர்ஷன் தன்னை தாக்கியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனைவி விஜயலட்சுமி கொடுத்த வழக்கும் நிலுவையிலிருக்கிறது. இந்த சூழ்நிலையில்  நடிகையும் மாடலுமான பவித்ரா என்பவருடன் தர்ஷனுக்கு நட்பு ஏற்பட்டது. கடந்த 2016ல் 54321 என்ற திரைப்படத்தில் பவித்ரா அறிமுகமானார். திரைப்படங்கள், தொலைக்காட்சியில் பணியாற்றியிருக்கும் இவர் மாடலாகவும் இருக்கிறார். இவருக்கு, ஏற்கெனவே சஞ்சய் சிங் என்பவருடன் திருமணமாகி இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். இருப்பினும், இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்துவருகின்றனர்.

இப்படியிருக்க, இந்த மாத தொடக்கத்தில் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, இருவரும் 10 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது கன்னட சினிமா வட்டாரங்களில் பேசுபொருளானது. தர்சன் பவித்ரா வாழ்க்கையில் புயல் வீசுவதற்கான விதை இங்குதான் விதைக்கப்பட்டது. 

இந்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்த தர்ஷனின் ரசிகர் ஒருவர் செய்த கமெண்ட் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் கொலையில் முடிந்துள்ளது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தர்ஷன் தனது காதலிக்காக ரசிகர் ஒருவரை துடிக்க துடிக்க கொன்று கால்வாயில் வீசியிருக்கிறார். 

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காமாட்சி பாளையா சாலையோரத்தில் ஜூன் 9ஆம் தேதி காலை இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  இந்த சடலமானது காமாட்சி பாளையாவிலுள்ள வினய் கவுடா என்பவரின் வீட்டிலிருந்து கிளம்பிய காரிலிருந்து வீசப்பட்டிருப்பது அப்பகுதி சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பெயர் ரேணுகாசாமி என்பதும் இவர் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் என்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை பார்த்து கொதித்து போன ரேணுகாசாமி, தர்ஷனும், விஜயலட்சுமியும் சேர்ந்து வாழும்படி அவரை விட்டு விலகும்படி மெசேஜ் செய்திருக்கிறார். மேலும், பவித்தராவுக்கு அவர் ஆபாசமாக மெசேஜ் செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ்கள் அனுப்பி பவித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் எனவும், இதனையடுத்தே தனது காதலன் தர்சன் உடன் சேர்ந்து பவித்ரா கவுடா கூலிப்படையினரை வைத்து ரேணுகாசாமியை கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

கொலை செய்யப்பட்ட ரசிகர் ரேணுகாசாமியின் உடலில் 34 இடங்களில் காயம் இருப்பதாகவும், அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை பெங்களூருக்கு கடத்தி வந்து சரமாரியாக அடித்து கொலை செய்தனர். 


இந்த வழக்கு தொடர்பாக, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார், தர்ஷன், பவித்ரா உட்பட 18 பேரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கொலை வழக்கானது சினிமாவை மிஞ்சிய கிரைம் திரில்லர் போலவே உள்ளது. ரேணுகாசாமியின் உடலில் 32 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார் ரேணுகாசாமி. 

இந்த கொலையில் கைதான சித்ரதுர்காவை சேர்ந்த ராகவேந்திரா, ஜெகதீஷ், அனு குமார், ரவி ஆகியோரை, சித்ரதுர்கா அழைத்து சென்றும் போலீசார் விசாரித்தனர். ரேணுகாசாமியை காரில் கடத்திய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. ரேணுகாசாமியை கடத்தி வந்த காரும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கொலையான ரேணுகாசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் 'ரேணுகாசாமியின் உடலில் 34 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பெல்ட், இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் அவரது கழுத்து எலும்பு முறிந்துள்ளது.தாக்குதலில் மர்ம உறுப்பிற்கு செல்லும் எலும்பும் முறிந்துள்ளது. மர்ம உறுப்பு உட்பட உடலில் ஐந்து இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கைதாகி உள்ள நந்திஸ் என்பவரிடம் விசாரித்த போது, பவித்ராவுக்கு தன் மர்ம உறுப்பு படத்தை ரேணுகாசாமி அனுப்பியதால், அவரது மர்ம உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்ததும் தெரிந்தது.

ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூர் வரை கொண்டு வந்து இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் ரவி பல உண்மைகளை தெரிவித்துள்ளார். சித்ரதுர்காவில் ராகவேந்திரா என்பவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் மன்றத்தை நிர்வகித்து வருகிறார் . ரேணுகாசாமியை நடிகர் தர்ஷனை சந்தித்து பேசி சமாதானத்திற்கு வரும்படி அழைத்துச் சென்றவர் ராகவேந்திரா. ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவான டிரைவர் ரவி, கடந்த ஜூன் 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் சரணடைந்து தனக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் தெரிவித்துள்ளார் ரவி. 

ரேணுகாசாமியை மன்னிப்பு கேட்க அழைத்துச் சென்று ஒரு ஷெட்டில் வைத்து பெல்ட்டால் தர்ஷன் அடித்துள்ளார் என்றும் தர்ஷனின் அடியாட்கள் ரேணுகா சுய நினைவை இழக்கும் வரை அவரை கம்பால் அடித்ததாகவும் ரவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. லாரியில் ரேணுகாவின் தலை பலமாக மோதியதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது இந்த கொலை பழியை ஏற்றுக் கொள்ளும் படி 3  நபர்களுக்கு தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. 


இதில் தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிகொண்டுவருவோம் எனவும், குற்றவாளிகள் சட்டத்தின்படி இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும் எனவும் போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா தெரிவித்திருக்கிறார். இன்னொருபக்கம், தர்ஷன் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியிருக்கிறார்.

ரேணுகாசாமியின் கொலை வழக்கு கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தர்ஷனுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடங்கியுள்ளன.  மறுபக்கம் நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக காவல்துறைக்கு அரசியல் தலைவர்கள் சார்பில் இருந்து அழுத்தங்கள் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் எந்த அழுத்தமும் காவல்துறைக்கு வரவில்லை என்று கன்னட துணை முதலமைச்சர் ஷிவகுமார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அடுத்தடுத்த விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறார்கள். சினிமா நடிகர்களை தெய்வங்களை தெய்வங்களாக கொண்டாடும் ரசிகர்களுக்கு கொலையை பரிசளித்துள்ளார் நடிகர் தர்சன். இதன் மூலம் அவரது திரை உலக வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் சேலஞ்சிங் ஆக மாறியுள்ளது. கர்மா ரிட்டன்ஸ் என்று பவித்ராவின் இன்ஸ்டா பக்கங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow