திருவண்ணாமலை கிரிவலைபாதை அத்துமீறிய சின்னத்திரை நடிகை: வனத்துறையினர் விசாரணை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலைபாதையில் அமைந்துள்ள வனப்பகுதியில் அத்துமீறிய சின்னத்திரை நடிகையிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் பொதுமக்கள் செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று இருக்கிறார்.
மலை உச்சிக்கு சென்று வந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் இருந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் பயந்துவிட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலை ஏற முடிவெடுத்தால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தடைவிதித்துள்ள பகுதிக்கு சென்றது மட்டுமில்லாமல், அதனை வீடியோ, புகைப்படம் எடுத்து பதிவிட்ட சின்னதிரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரனிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?

