திரிஷாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த குஷ்பூ....

Feb 20, 2024 - 21:41
திரிஷாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த குஷ்பூ....

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பேசியதற்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் நடிகை கஸ்தூரி, இயக்கநர் சேரன், மன்சூர் அலிகான், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட  திரையுலகைத்தை சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பெண்கள் குறித்து கேவலமான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் ஒரு பெண்ணுக்குதான் பிறந்தாரர்களா என்பது கேள்விக்குறியான ஒன்று என்று குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow