டெல்லி முதல்வரின் பாராட்டு மழையில் Kesari Chapter 2 .. ரசிகர்களுக்கு அக்‌ஷய் விடுத்த வேண்டுக்கோள்

1920-களில் நீதிமன்ற வழக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் சி சங்கரன் நாயரின் வாழ்வினை தழுவி கேசரி 2 திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

Apr 16, 2025 - 07:16
டெல்லி முதல்வரின் பாராட்டு மழையில் Kesari Chapter 2 .. ரசிகர்களுக்கு அக்‌ஷய் விடுத்த வேண்டுக்கோள்
kesari chapter 2 movie premiere show

திரையரங்குகளில் கேசரி 2 படத்தைப் பார்க்கும்போது யாரும் மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

கேசரி 2 படத்தின் சிறப்பு காட்சி புகழ்பெற்ற சாணக்யபுரி திரையரங்கில் நடைபெற்றது. இந்த சிறப்புத் திரையிடலில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுராக் தாக்கூர் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பீரிமியர் ஷோவிற்கு வருகைத் தந்திருந்த சிறப்பு விருந்தினர்களை முன்னணி நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோர் நேரில் வரவேற்றனர். படத்தினை பார்த்த டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

பீரிமியர் ஷோவில் உரையாற்றிய அக்‌ஷய் குமார், "நீங்கள் அனைவரும் உங்கள் தொலைபேசிகளை உங்கள் பைகளில் வைத்துக்கொண்டு இந்தப் படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது நிறைய அர்த்தமுள்ளதாக இருக்கும். படம் பார்க்கும்போது உங்கள் இன்ஸ்டாகிராமைப் பார்க்க முயற்சித்தால், அது படத்தினை அவமானப்படுத்துவது போல் இருக்கும். எனவே அனைவரும் தங்கள் தொலைபேசிகளை படம் பார்க்கும் போது ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

படத்தின் கதை என்ன?

அறிமுக இயக்குனர் கரண் சிங் தியாகி இயக்கிய இந்தப் படம், 1920-களில் நீதிமன்ற வழக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் சி சங்கரன் நாயரின் வாழ்வினை தழுவி படமாக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் நாயரின் கொள்ளுப் பேரன் ரகு பலாட் மற்றும் அவரது மனைவி புஷ்பா பலாட் ஆகியோரால் எழுதப்பட்ட "The Case That Shook the Empire" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தின் திரைக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னரும் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் மூளையாக இருந்தவருமான மைக்கேல் ஓ'ட்வயர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்ட அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக நாயர் மீது வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமார், மாதவன், அனன்யா பாண்டே நடித்துள்ள “கேசரி 2” திரைப்படத்தினை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: Movie Release Date: தனுஷ் முதல் சூரி வரை.. போட்டி போட்டு பட வெளியீடு தேதி அறிவித்த ஹீரோக்கள்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow