சூட்கேசில் மர்மம்: விமான நிலையத்தை சுற்றி வளைத்த தொழிலாளர்கள்
சுவிட்சர்லாந்தில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு புறப்பட இருந்த பயணிகள் விமானத்தில் கதிரியக்க கசிவு இருந்ததை அடுத்து விமானம் சுற்றிவளைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திலிருந்து விமானம் ஒன்று 134 பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களுடன் ஸ்பெயினின் பார்சிலோனாவுக்கு புறப்பட்டது. பின்னர், பார்சிலோனா விமான நிலையத்தை அடைந்தபோது, விமானத்தில் இருந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டதாக தெரிய வந்தது.
இதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை சுற்றி வளைத்தனர். மேலும், சோதனைக்காக கதிரியக்க நிபுணர்கள் அழைத்து வரப்பட்டனர். ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டதை அடுத்து, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை.
விமானத்தின் சரக்கு பெட்டியை இறக்கியபோது, மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டியில் ஈரமான திட்டுகள் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். கதிரியக்க கசிவுகள் கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, 5 ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், பரபரப்பான விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் சாதாரணமாக இயக்கப்பட்டு வந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?