வாழ்க்கைத் துணையால் வசந்தம்.. மகரம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் கவனத்திற்கு

மகரம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கான இந்த வார ராசிபலன்கள் விவரம் இதோ..

Apr 2, 2025 - 10:29
வாழ்க்கைத் துணையால் வசந்தம்.. மகரம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் கவனத்திற்கு
weekly horoscope (ap 2 to ap 8)

மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு வாரம் ஏப்.2 முதல் ஏப்.8 ஆம் தேதி வரையில் என்ன மாதிரியான அணுகுலம் நிலவும் என்பதனை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. மேற்குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்களின் விவரம் பின்வருமாறு-

மகரம்: கெட்டது விலகி தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம், அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம், கையெழுத்திடும் சமயங்களில் கவனம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். வீடு, மனை வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தைக் கும்பிடுவது நல்லது செய்யும்.

தொழிலில் லாபம் சீராகும். சராகும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வரும். மாணவர்களுக்கு நிதானம் முக்கியம். பயணத்தில் பிறர் தரும் உணவு, பானங்களைத் தவிருங்கள். தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.

கும்பம்:

எண்ணம் போல் ஏற்றங்கள் வரும் காலகட்டம். இந்த சமயத்தில் வீண் ரோஷம் வேண்டாம். அலுவலகத்தில் எதிர்பாரா நன்மைகள் உண்டு. சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம்.

பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். உணவில் நிதானம் முக்கியம். யாருக்கும் வாக்குறுதி தருவதைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் அவசியம். அரசு, அரசியலில் உள்ளவர்கள் பொறுப்பு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு வரும். மாணவர்கள் கவனச்சிதறலைத் தவிர்ப்பது முக்கியம். இரவு பயணத்தை இயன்றவரை தவிருங்கள். மூட்டு, முதுகு, கழுத்து உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.

Read more: மேஷம் முதல் மிதுனம் ராசி: இந்த வாரம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு

மீனம்:

அமைதியாக செயல்பட்டால், அநேக நன்மைகள் கைகூடும் காலகட்டம். பணியிடத்தில் உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தேவையற்ற படபடப்பு தவிர்ப்பது நல்லது.

வீட்டில் உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் தவிருங்கள். அரசுத்துறை, அரசியல் துறையில் இருப்பவர்கள் அவசரம், அலட்சியம் தவிர்ப்பது அவசியம். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். சளி, அல்சர், அலர்ஜி உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் சேர்க்கும்.

Read more: கடகம் முதல் கன்னி ராசி: விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள்.. இல்லையென்றால் சிரமம் தான்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow