"பிரதமரின் கல்விச்சான்றிதழ் போல் எங்கள் கட்சி போலியானதல்ல.." உத்தவ்தாக்கரே பேச்சு..

தங்களுடைய சிவசேனா கட்சி பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச்சான்றிதழ் போல் போலியானதல்ல என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தெரிவித்துள்ளார்.

Apr 13, 2024 - 15:50
Apr 13, 2024 - 15:53
"பிரதமரின் கல்விச்சான்றிதழ் போல் எங்கள் கட்சி போலியானதல்ல.." உத்தவ்தாக்கரே பேச்சு..

மும்பையில் சிவசேனா உத்தவ்தாக்கரே கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ்தாக்கரே, பாஜகவின் எதேச்சதிகாரம் நாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். கூட்டணி ஆட்சியே கூடாது என்ற எண்ணம் ஒரு காலத்தில் இருந்ததாகவும், பி.வி.நரசிம்மராவ் - அடல் பிஹாரி வாஜ்பாய் - மன்மோகன்சிங் ஆகியோர் கூட்டணி ஆட்சியை சிறப்பாக நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சியான I.N.D.I.A. கூட்டணியே சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் எனவும், மகா விகாஸ் அகாடி விரைவில் மாநிலத்தில் வெற்றிப் பேரணியை நடத்தும் எனவும் உத்தவ்தாக்கரே குறிப்பிட்டார்.

போலி சிவசேனா என தனது கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததற்கு பதிலளித்த அவர், பிரதமரின் கல்விச்சான்றிதழ் போல் தனது கட்சி போலியானதல்ல என பதிலடி கொடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிரா ஒருபோதும் ஏற்கப் போவதில்லை எனவும் பவார்கள் மட்டுமே அங்கு சத்தம் போடுவர் எனவும் அவர் சாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow