தேர்தல் ஆணையம் சொதப்பல்.. மக்களவைத் தேர்தல் படு தோல்வி.. வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்
எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் சொதப்பி வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டாதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தேர்தல் ஆணையம் குறித்து கடுமையாக விமர்சித்தார். சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு கொடுத்திருக்கக் கூடிய கடிதம் வெத்து பேப்பர், சசிகலா, டிடிவி ஓபிஎஸ் எல்லாருக்கும் ஃபுல் ஸ்டாப் வைக்கின்ற அளவுக்கு தேர்தல் முடிவுகள் இருக்கும்.
கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு காணவில்லை என அண்ணாமலை கூறுவது கிணற்றை காணவில்லை என வடிவேல் கூறுவது போல உள்ளது என கிண்டல் அடித்தார்.
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் ஒரு எழுச்சியாக அலை கண்டறியப்பட்டது , மகத்தான வெற்றியை ஜூன் நாலாம் தேதி தமிழக மக்கள் எங்களுக்கு அளிக்கின்ற நிலை உள்ளது
சென்னை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தலைமை கழக நிருவாகிகள் எப்படி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார்கள் பிறகு மற்ற விவரங்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார்
ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் தோல்வியாக இந்த தேர்தலை சொல்லலாம் , வாக்காளர்களின் எதிர்பார்ப்பின் பூர்த்தி செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு , 100 சதவீதம் வாக்குகளை பெறவேண்டும் என பல்வேறு முறை தெளிவாக அழிவுறிக்க பட்டது ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் இந்த தேர்தல் பணிகள் நடைபெற்றன
தேர்தல் முடிந்த பிறகு இயல்பாக தேர்தல் வாக்குபதிவு குறித்து அட்டவணை வெளியிடப்படும் கடந்த முறை 2-3 சதவிகிதம் தவறுதலாக வருவது இயல்பு ஆனால் இந்த முறை 7-8 சதவிகிதம் தவறாக வந்துள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பலர் வாக்களிக்க முடியாமல் செய்துள்ளது. வாக்களிக்க முடியாதவர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது என்பதே உண்மையாகும்
என்று குற்றம் சாட்டினார் ஜெயக்குமார்.
சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் யாரும் தற்போது அரசியலில் இல்லை , 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் அரசியலை விட்டு வெளியேறுவது உறுதி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
What's Your Reaction?