கடலுக்குள் சென்று வாக்கு சேகரிப்பு... பாஜக வேட்பாளர் பால் கனகராஜு-க்கு பெருகும் ஆதரவு...

வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

Apr 15, 2024 - 06:56
கடலுக்குள் சென்று வாக்கு சேகரிப்பு... பாஜக வேட்பாளர் பால் கனகராஜு-க்கு பெருகும் ஆதரவு...

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் படகில் சென்று மீனவர்களிடம் வாக்குசேகரித்தார். 

மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தகிக்கும் வெயிலையும் சகித்துக் கொண்டு அனல் பறக்கும் பிரசாரத்திலும், வீதி, வீதியாக சென்று ஆதரவும் திரட்டி வருகின்றனர். 

இந்நிலையில், வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மற்றும் பைபர் படகில் சென்று தாமரைச் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். 

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சந்தித்த வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், அவர்களின் பிரச்னை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பால்கனகராஜின் செயலுக்கு மீனவ சமூகத்தினர் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow