ராமர் கோவில்.. 500 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது..! பாஜக தான் காரணம்.. பிரதமர் மோடி பெருமிதம்..!
பாஜக, டெல்லி, தேசிய செய்திகள், அமித் ஷா, பிரதமர், நரேந்திரமோடி, அமித்ஷா, காங்கிரஸ், இந்தியா, BJP, Delhi, NationalNews, AmitShah, PrimeMinister, NarendraModi, AmitShah, Congress, India
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு நிறைவடைந்துள்ளதாக டெல்லியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் பாஜக தேசிய மாநாடு 2024 நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடக்கத்தில் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜின் மறைவுக்கு அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு நிறைவடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளதாக கூறினார்.
பாஜகத் தொண்டர்கள் 24 மணி நேரமும் நாட்டிற்குச் சேவை செய்வதற்காக கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும் புதிய நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும் என்றார். "அடுத்த 100 நாட்களில், பாஜக தொண்டர்கள் அனைவரும் ஒவ்வொரு புதிய வாக்காளர்கள், ஒவ்வொரு பயனாளிகள், ஒவ்வொரு சமூகத்தையும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் அறிவுத்தினார்.
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் எனற் நாட்டின் கனவும், தீர்மானமும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கிய பங்கு வகிக்கும் என்றார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு பிராந்தியத்தின் வளர்ச்சியிலும் நாம் கவனம் செலுத்துகிறோம் என்று கூறிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமே உள்ளதால் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் புறக்கணித்ததாக குற்றஞ்சாட்டினார்.
What's Your Reaction?