ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் : முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்கள்?
முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி, ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்துள்ளது.
முட்டைகளில், மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகளின் எச்சங்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நைட்ரோஃபியுரான் என்பது கோழி, பன்றி, இறால் போன்று உணவுக்காக வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு வழங்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்து. இந்த மருந்து வகைகள் இந்தியா, அமெரிக்கா உட்பட உலகளவில் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகளில் நைட்ரோஃபுரானை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
ஆனால், நைட்ரோஃபியுரானின் எச்சங்கள் கொண்ட முட்டைகளை உண்டால், அவை உடலில் நீண்ட நாட்கள் தங்கி புற்றுநோய், மரபணு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது.
கர்நாடகாவைச் சேர்ந்த எகோஸ் எனும் நிறுவனத்தின் முட்டைகளில் இந்த வேதிப்பொருட்கள் இருப்பதாக ஆய்வு நடத்திய தரவுகளோடு யூடியூபர் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
டில்லியில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாமாக முன் வந்து இந்த விவகாரத்தில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு பிறப்பித்த உத்தரவில், 'அனைத்து நிறுவன முட்டைகளின் மாதிரிகளையும் பெற்று அதில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து , 'எகோஸ்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் பண்ணைகளில் தடை செய்யப்பட்ட எந்த ஆன்டிபயாடிக்கையும் பயன்படுத்தவில்லை. ஒரு கிலோ முட்டையில், 0.73 மைக்ரோ கிராம் ஆன்டிபயாடிக் இருந்ததாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் முட்டைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். உற்பத்தி மையங்களிலும், மொத்த மற்றும் சில்லரை விற்பனைக் கடைகளிலும், திடீர் ஆய்வு நடத்தி, சந்தேகத்துக்குரிய முட்டைகளைப் பறிமுதல் செய்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வருகிறோம். ஓரிரு வாரங்களில், அதன் முடிவுகள் வெளியாகும். என தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?

