65 நாட்கள்.. 21,000 கி.மீ..! ஒற்றை ஆளாக புல்லட்டில்15 மாநிலங்களுக்கு பயணம்.. யார் இந்த புல்லட் ராணி..?

Feb 18, 2024 - 16:27
Feb 18, 2024 - 16:47
65 நாட்கள்.. 21,000 கி.மீ..! ஒற்றை ஆளாக புல்லட்டில்15 மாநிலங்களுக்கு பயணம்.. யார் இந்த புல்லட் ராணி..?

பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வலியுறுத்தி பயணத்தை துவக்கியுள்ள புல்லட் ராணி ராஜலெட்சுமிக்கு சென்னையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவை திரட்டி வருகிறார்.  

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாத்தாஜி ராஜலட்சுமி மாண்டா என்பவர் தனது புல்லட் பயணப் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இளம் வாக்காளர்கள் மற்றும் நாட்டு மக்களிடையே மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறும் வகையில் மதுரையில் இருந்து புல்லட் மூலம் பிரசாரத்தை துவங்கியுள்ள புல்லட் ராணி ராஜலட்சுமிக்கு சென்னை மதுரவாயலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது மோடி முகம் பதித்த முகமூடியை அணிந்து வந்த பாஜகவினர் 2024 தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய முழக்கங்களை எழுப்பி புல்லட் ராணியை வழி அனுப்பி வைத்தனர். இந்த புல்லட் பிரசாரம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா என 15 மாநிலங்களுக்கு சென்று டெல்லியில் நிறைவடைய உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow