சட்டமன்ற தேர்தலுக்கு ஜரூராக தயாராகும் மக்கள் நீதி மய்யம்
சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. ஐந்து பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உருவாக்கியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் 8 மண்டல நிர்வாகிகள் மற்றும் அணித்தலைவர்களிடம் கள நிலவரங்கள் குறித்து கட்சி தலைவர் கேட்டறிந்தார். திமுக 40க்கு 40 வெற்றி பெறுவதற்கு எங்கள் தலைவரின் பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்தது.
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய பாதிப்புகளை தடுப்பதில்தான் உள்ளது, ஆட்சியில் பங்கு கேட்பதில் இல்லை ; ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதில். கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு வழங்கியுள்ளோம். கூட்டணி தர்மம் காரணமாக தற்போது எந்த தொகுதியில் போட்டியிடுவார் என கூற முடியாது.
கமல்ஹாசன் எங்கு போட்டியிடுவார் என தற்போது கூற முடியாது. நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டம் சுயநலவாதிகளின் கூட்டம்.தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னம் பெற்றுள்ளோம். கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
தனி சின்னத்தில்தான் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவோம். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மற்றும் தொண்டர்களின் உழைப்பால் 40 இடங்களில் வெற்றிக்கு உழைத்தோம். தேர்தல், கூட்டணி பங்கீடு குறித்து பேசி வருகிறோம். இறுதியானதும் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
15 தொகுதி பட்டியல்
கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மதுரை மத்தி, ஆலந்தூர், தியாகராயநகர் ஆகிய 15 தொகுதிகளின் விருப்ப பட்டியலை திமுக தலைமையிடம் மக்கள் நீதி மய்யம் அளித்துள்ளது.
What's Your Reaction?

