Manoj K Jayan: விலையுயர்ந்த டெஸ்லா கார் வாங்கிய பிரபல நடிகர்… ஆத்தி! விலை எவ்ளோன்னு தெரியுமா..?

தூள், திருமலை, வில்லு, பில்லா 2 உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் மனோஜ் கே ஜெயன். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், விலையுயர்ந்த டெஸ்லா கார் வாங்கி அசத்தியுள்ளார்.

Apr 8, 2024 - 14:38
Manoj K Jayan: விலையுயர்ந்த டெஸ்லா கார் வாங்கிய பிரபல நடிகர்… ஆத்தி! விலை எவ்ளோன்னு தெரியுமா..?

: மலையாளத்தில் ஹீரோ, வில்லன் என பல வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் மனோஜ் கே ஜெயன். 1988ம் ஆண்டு முதல் திரையுலகில் பயணித்து வரும் இவர், தமிழில் ரஜினியின் தளபதி படத்தின் மூலம் என்ட்ரியானார். விக்ரமின் தூள், திருமலை படத்தில் விஜய்க்கு வில்லன், அஜித்தின் ஜனா, திருப்பாச்சி, திமிரு, வில்லு, அஜித்தின் பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் புதிய டெஸ்லா கார் வாங்கியுள்ளதாக மனோஜ் கே ஜெயன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.  

அதில், இது ஒரு அழகான கனவு, நிறைவேறாது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது உண்மையாகிவிட்டது. உலகின் புதுமையான டெஸ்லா காரை சொந்தமாக்கியதில் மகிழ்ச்சி. லண்டனில் உள்ள தனது குடும்பத்தில் டெஸ்லா புதிய உறுப்பினராக இணைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய காரின் மேல் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

மனோஜ் கே ஜெயன் வாங்கியுள்ள டெஸ்லா காரின் விலை இந்திய மதிப்பில் 70 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், டெஸ்லா கார் வாங்கிய முதல் மலையாள நடிகர் என்ற பெருமையும் மனோஜ் கே ஜெயனுக்கு தான் சொந்தம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லா காரின் மீதான மோகம் உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், மனோஜ் கே ஜெயன் தனது கனவை நனவாக்கியுள்ளார் என ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow