கோவையில் முதல்ல ரோடு போடுங்க.. அப்பறம் கிரிக்கெட் மைதானம் கட்டலாம்.. முதலமைச்சரை விளாசிய அண்ணாமலை
கோவையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் சர்வதேச விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் முதலில் ரோடு போடுங்க. அப்பறம் விளையாட்டு மைதானம் கட்டலாம் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
கோவையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் சர்வதேச விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் முதலில் ரோடு போடுங்க. அப்பறம் விளையாட்டு மைதானம் கட்டலாம் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவையில் ஒவ்வொரு பஞ்சாயத்தின் தாய் கிராமத்திலும் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் வரப்படும்னு பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4000 கோடியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த மாதிரி கவர்ச்சியான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் வாக்கை பெறலாம் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே களத்தில் இறங்கி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
பாஜக ஜெயித்தால் இந்தியாவின் தலைநகராக நாக்பூர் மாற்றப்பட்டுவிடும் என்று கமல்ஹாசன் கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுபோன்று பேசும் கமல்ஹாசன் போன்ற தலைவர்களை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தோல்வி பயத்தின் காரணமாக முதலமைச்சர் சென்னையில் இருந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். திமுகவினர் இடத்திற்கு தகுந்தார்போல் தங்க தோடு, மூக்குத்தி போன்றவற்றை கொடுத்தாலும், பணத்தை அள்ளி வீசினாலும், தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் கோவையில் மக்களின் வாக்கு பாஜகவிற்கு கிடைக்கும்.
ஜெயிலில் இருந்து டி.ஆர்.பி.ராஜாவுக்கு செந்தில் பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதிட்டு இருக்காரு. என்ன பண்ணாலும் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று அண்ணாமலை கூறினார்.
What's Your Reaction?