5 தொகுதிகளில் போட்டி - ஜான் பாண்டியன் திட்டவட்டம்
தமிழ்நாட்டில் தென்காசி தவிர, நெல்லை, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது
ஜான் பாண்டியனை நிறுவனத் தலைவராகக் கொண்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், மாநில இளைஞர் அணித் தலைவர் வியங்கோ பாண்டியன், மகளிர் அணிச் செயலாளர் நிவேதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜான் பாண்டியன் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.இதற்காக கிராமம் கிராமமாக போய் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தென்காசி தொகுதி முழுக்க செய்து வருகிறார்.எனவே தென்காசி நாடாளுமன்றத் தொகுதி முகவர்களிடம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கருத்துக்கள் கேட்டிருக்கிறார் என்றனர்.
பின்னர் ஜான் பாண்டியன் பேசுகையில், “தென்காசி நாடாளுமன்றத்தொகுதியில் கட்டாயம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும், நான் வேட்பாளரா அலல்து வேறு யாராவது போட்டியிடுவார்களா என்பது பற்றி கட்சி முடிவு செய்யும். தற்போது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் நெருக்கமாயிருக்கிறோம். கூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில் முடிவு செய்வோம். தமிழ்நாட்டில் தென்காசி தவிர, நெல்லை, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
What's Your Reaction?