தஞ்சை: மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் இறப்பு

தம்பதி இருவரும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dec 1, 2023 - 13:34
Dec 1, 2023 - 13:52
தஞ்சை: மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் இறப்பு

மண பந்தலில் தம்பதிகளாய் இணைந்தவர்கள் மரண பந்தலிலும் தம்பதிகளாய் இணைந்துள்ளது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம்,கரிக்காடிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ராமசாமி செட்டியார் வயது (96).இவரது மனைவி வள்ளியம்மை ஆச்சிக்கு (85) வயது.60 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.இரண்டு மகள், 3 மகன்கள் உள்ளனர்.

பேரன்கள், கொள்ளு பேரன்கள், எள்ளு பேரன்கள் என நான்கு தலைமுறைகளை கண்ட இந்த தம்பதியினர் இன்று ஒன்றாக மரணம் அடைந்துள்ளனர்.வயது முதிர்வு காரணமாக வள்ளியம்மை ஆச்சி நேற்று காலை மரணம் அடைந்தார். 96 வயதிலும் திடகாத்திரமாக இருந்த ராமசாமி செட்டியார் மனைவியின் மரணத்தால் நிலை குலைந்து போனார்.

மனைவி உடல் அருகில் அமர்ந்து மனைவியின் முகத்தை உற்று பார்த்து கொண்டு இருந்த ராமசாமி செட்டியார் மனைவி உடல் வைத்து இருந்த ஐஸ் பெட்டியில் மயங்கி விழுந்தவரின் உயிர் பிரிந்தது.ஒன்றாக வைக்கப்பட்டுள்ள இருவரது உடல்களுக்கும் கிராமம் மக்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.வாழ்வில் ஒன்றாக பயணித்த தம்பதிகள் சாவிலும் ஒன்றாக பயணிக்க உள்ளனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow