தமிழக கோயில் புனரமைப்பு பணிகளில் ஊழல் - எச்.ராஜா அடுக்கடுக்கான புகார்

இனிமேல் மு.க.ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார். ஏனென்றால் ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியே சொல்லிவிட்டார்

Oct 2, 2024 - 17:12
Oct 2, 2024 - 17:14
தமிழக கோயில் புனரமைப்பு பணிகளில் ஊழல் - எச்.ராஜா அடுக்கடுக்கான புகார்
தமிழக கோயில் புனரமைப்பு பணிகளில் ஊழல் - எச்.ராஜா அடுக்கடுக்கான புகார்

திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில் பணிகளில் பெரும்பாலும் ஊழல் நடந்துள்ளது என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா, “காந்தி ஜெயந்தி முன்னிட்டு எப்படியாவது தமிழகத்தில் குறிப்பாக பெண் வாக்காளர்களர் கருத்தில் கொண்டு திசை திருப்பும் விதமாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாகவும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இன்று மது ஒழிப்பு மாநாடா ..? மது ஊக்கவிப்பு மாநாடா ..? என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாடு நடத்துகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு மது ஊக்குவிக்கும் அரசு, ஏனென்றால் 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று சொல்லிவிட்டு ஆயிரம் தனியார் கிளப்புக்கு கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.அந்த கிளப்பில் 150 உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதி.ஆனால் இங்கு விதிகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை.இந்த மது ஊக்குவிப்பு அரசாங்கம் அதன் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றால், இது யாரை ஏமாற்றும் மாநாடு இது. மது ஒழிப்பு மாநாடா இது. மது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மது பிரியர்கள் மாநாடு.இவர்கள் மக்களை குறிப்பாக பெண் வாக்காளர்கள் ஏமாற்றுவதற்காக திசை திருப்புவதற்குமான மாநாடாக அமைந்துள்ளது.

மது மாநில கொள்கை மட்டும்தான் உள்ளது. அது மத்திய அரசு கொள்கை இல்லை. மதுக்கடைகளை திறப்பது திமுக அரசு. கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சம்பவத்தில் திமுகவிற்கு வெட்கமே இல்லை. இந்த ஆண்டு 1,700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் அதிக வருமானம் வந்துள்ளது என்பது திமுக கூறியிருப்பது வெட்க கேடான விஷயம்.

மதுக்கடைகளை திறந்தவர்களே தான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிறார்கள். திமுக அரசு மதுக்கடைகளை திறந்து விட்டு சாவிகளை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளனரா? இது மாநில அரசின் கொள்கை திறந்தவர்கள் தான் மூட வேண்டும்.மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு, மக்களை ஏமாற்றுகிற மாநாடு. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம் தொடர்ந்து அந்த விதிமுறைகளை பின்பற்றலாம் என கூறியிருந்தும், இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.இதுதான் திராவிட மாடல்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்துள்ளது.மேலும் நல்ல தீர்ப்பை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கி உள்ளது. மேலும், கோயில் புனர்நிர்மாணம் செய்வது கட்டுமானங்கள் தரமற்ற முறையில் உள்ளது. அதனால்தான் பழனி கோயில் கோபுரத்தில் மேற்பகுதி சிதலமடைந்துள்ளது.திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் புனரமைப்பு பணிகளில் பெரும்பாலும் தமிழகத்தில் ஊழல் நடந்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்று ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.அவர் கூறியிருந்தது போலவே செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார்.அதிலிருந்தாவது புரிந்துகொண்டு தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்திருக்கக் கூடாது.

தர்மம்.. நீதி.. நியாயம்.. நீதிமன்றம் என எதையும் மதிக்காத தர்பார் ஆட்சி, தற்போது தமிழகத்தில் நடந்துள்ளது. கல்லூரிகளில் போலியான ஆதார் கார்டுகளை கொடுத்து ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் முறைகேடாக பணியாற்றியது தெரியவந்துள்ளது.தற்போது பொன்முடி அந்தத் துறையின் அமைச்சராக இல்லாத சூழலில் முதல்வர் முறையாக விசாரணை செய்து அது என்ன முறையீடு நடந்தது என்று குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் கள ஆய்வு நடத்த வேண்டும்.
 
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை கொண்டு சென்ற பாதையில் தற்போது அதிமுக அக்கட்சி செல்கிறதா.. என்று அதிமுக தொண்டர்கள் நினைத்திருக்கலாம், அதனால் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம், அந்த விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை.எங்களுக்கு கிடைத்துள்ள 18% வாக்குகள் பிரதமர் மோடிக்காக கிடைத்த வாக்குகள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மூலவர் என கூறியிருந்த கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா, இனிமேல் ஸ்டாலின் எங்கேயும் சுற்றுப்பயணம் செல்ல மாட்டார். ஏனென்றால் ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியே சொல்லிவிட்டார் என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow