கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராக தி.மு.க போராட்டம்

நடவடிக்கை எடுக்காவிட்டால் அணுமின் நிலையம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்

Dec 1, 2023 - 15:10
Dec 1, 2023 - 19:06
கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராக தி.மு.க போராட்டம்

கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராக போராட அனுமதி கேட்டு தி.மு.கவினர்  மனு அளித்துள்ளனர்
 
நெல்லை மாவட்ட தி.மு.க பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ஓன்றிய செயலாளர் பெல்சி உள்ளிட்ட தி.மு.க கவுன்சிலர்கள் நெல்லை கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து  மனு கொடுத்தனர்.அதில் கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சொல்லி விரைவில் போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். 

இது குறித்து வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் கூறுகையில், கூடங்குளம் அணுமின் உலை நிர்வாகத்தின் சமூக மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இந்த திட்டங்கள் அனைத்தையும் கூடங்குளம் நிர்வாகமே நேரடியாய் செய்கிறது, அது தவறு, நிதியை உள்ளாட்சி அமைப்புக்களிடம் வழங்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். 

வேலை வாய்ப்பில் லோக்கல் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிலம் வழங்கயவர்களுக்கும் பணிகள் கொடுக்க வேண்டும். கூடங்குளம் ஒன்றியத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.

புற்றுநோய் மற்றும் டயாலசிஸ் மையங்கள் திறக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அணுக்கழிவுகள் எப்படி அகற்றப்படுகிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் பற்றி அணுமின் நிலைய வளாக இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 8ம் தேதிக்குள் அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அணுமின் நிலையம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow