வசூல் பண்றவருக்கே வழிப்பறி.. கட்டி வெச்சு கஞ்சி காய்ச்சிய மயிலாடுதுறை மக்கள்

வழிப்பறி கொள்ளையில ஈடுபட்டவங்கள்ல ஒருத்தர் 15 வயசு சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது

Apr 18, 2024 - 08:45
வசூல் பண்றவருக்கே வழிப்பறி.. கட்டி வெச்சு கஞ்சி காய்ச்சிய மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறையில வழிப்பறி கொள்ளையில ஈடுபட்ட நபர பிடிச்ச பொதுமக்கள், அவரோட கைய கால கட்டி கையோட பைக்குல தூக்கிட்டு போயி போலீஸ்ட்ட ஒப்படைச்சுருக்காங்க..வசூலுக்காக போனவர்கிட்ட வழிப்பறி பண்ணி பொதுமக்கள்ட்ட வாங்கிட்ட திருடர் குறித்து பார்க்கலாம்...

மயிலாடுதுறைய அடுத்த சேந்தங்குடி வடபாதி தெருவ சேர்ந்தவரு ஜெகன்நாதன். இவரு, சிட்பண்டு கம்பெனில கலெக்‌ஷன் டிபார்ட்மெண்ட்ல இருக்குறதா சொல்லப்படுது. வழக்கம்போல ஜெகன்நாதன் கடந்த 16-ந் தேதி, ஆனதாண்டவபுரம் பகுதில வசூலுக்காக தன்னோட இரு சக்கர வாகனத்துல போயிருக்காரு.. அப்படி போகும்போது அவரோட வண்டி எதிர்பாராத விதமா பஞ்சர் ஆகியிருக்கு. சரி லிஃப்ட் கேட்டாவது போயிருவோம்னு நெனச்ச ஜெகன்நாதன் அந்த வழியா வந்த இளைஞர் ஒருத்தர்க்கிட்ட லிஃப் கேட்டிருக்காரு...

அப்படி லிஃப் குடுத்த இளைஞரோட மயிலாடுதுறைய நோக்கி போன ஜெகநாதனுக்குதான் அங்க அதிர்ச்சி காத்திருந்திருக்கு...கழுக்கானிமுட்டம்கிற பகுதியில போயிட்டு இருக்கும் போது ஜெகநாதன் போன பைக்க மர்ம நபர்கள் ரெண்டு பேர் வழிமறிச்சிருக்காங்க. அப்போதான் ஜெகன்நாதனுக்கு ட்விஸ்ட்டு குடுக்குற மாதிரி, லிஃப்ட்டு குடுத்தவரும் சேர்ந்து ஜெகன்நாதன தாக்கி, பணத்த எடுக்கச் சொல்லி மெரட்டியிருக்காங்க. அதுபோக பணத்தையும் பறிச்சுட்டு அவர வெரட்டி அடிச்சிருக்காங்க... 

இதனால அதிர்ச்சியான ஜெகன்நாதன் உடனே ஊருக்குள்ள போய் தன்னோட நண்பர்கள் உதவியோட வழிப்பறில ஈடுபட்டவங்கள தேடியிருக்காரு. அப்போ அந்தக் கும்பல்ல சேர்ந்த ஒருத்தர் அவங்க கண்ணுல தட்டுப்பட்டிருக்காரு.. அதுக்கு அப்புறமா அவர அலேக்கா பைக்குல வச்சு தூக்கிட்டு போய் வச்சு நையப்புடைச்சு ஆதங்கத்த தீத்திருக்காங்க ஜெகன்நாதனோட நண்பர்கள்.. அப்புறம் காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அவங்க வந்ததும் திருட்டு கும்பல சேர்ந்தவர போலீஸ்ல ஒப்படைச்சிருக்காங்க. அவருகிட்ட விசாரணை நடத்துன போலீஸ்காரங்க, தப்பிச்சுப் போன ரெண்டு பேரையும் கைது பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க. அதுல ஒருத்தர் 15 வயசு சிறுவன்ன்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow