பள்ளி மாணவன் மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல்..!

Feb 10, 2024 - 19:38
Feb 10, 2024 - 20:00
பள்ளி மாணவன் மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல்..!

அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவன் மீது காவலர் ஒருவர் தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மாணவனின் தந்தை ரஹீமா அளித்துள்ள புகாரில், சென்னையை அடுத்த போரூர், விக்னேஸ்வரா பேருந்து நிறுத்தம் அருகில் அரசுப் பேருந்தில் பயணித்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலைய காவலர் விஜயகுமார் எந்தவித தவறும் செய்யாத தனது மகனை பொதுமக்கள் முன்னிலை தகாத வார்த்தையில் பேசி, கன்னத்தில் முகத்தில் அடித்து நெஞ்சில் குத்தியும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அடிபட்டு கீழே விழுந்தால் தனது மகனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருவதாகவும் எனவே தனது மகன் மீது கொலை வெறி  தாக்குதல் நடத்திய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow