உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்.. 17 பேர் பலி ! உலக நாடுகள் ஆதரவு இல்லை - ஜெலன்ஸ்கி புகார்..
உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையே 2022-ம் ஆண்டில் இருந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இருதரப்பிலும் 50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பல்கலைக்கழகம், மருத்துவமனைகள் நிறைந்த முக்கிய வணிக நகரமான செர்னிஹிவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இதில் 25 வயது போலீஸ் அதிகாரி, நோய்வாய்ப்பட்ட மூதாட்டி உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்ததாகவும் 61 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், பல கட்டிடங்கள் சீர்குலைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாயமானோரை தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக ஒத்துழைப்பும், உக்ரைன் போதுமான வான் பாதுகாப்பு ஆயுதங்களைப் பெற்றிருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?