குடிபோதையில் கொலைவெறித் தாக்குதல்.. உடன்பிறந்த அண்ணனையே போட்டு தள்ளிய தம்பி..
 
                                ஆற்காடு அருகே குடிபோதையில் உடன்பிறந்த அண்ணனையே தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு அடுத்த சாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான சரவணன்,புனிதா என்பவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் மாற்றுத்திறனாளி சரவணன் மற்றும் அவருடைய தம்பிகளான சத்தியமூர்த்தி ,சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது வீடு கட்டுவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் அண்ணன் மற்றும் தம்பிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.இதில் சத்தியமூர்த்தி என்பவர் சரவணனை கட்டையால் ஓங்கி தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அவருடைய தாயாரும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி சரவணன் மனைவி புனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சத்தியமூர்த்தியை ஆற்காடு கிராமிய போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மற்றொரு தம்பியான சௌந்தர்ராஜன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            