பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை - விஜய் 

பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை.

Oct 27, 2024 - 20:36
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை - விஜய் 

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில்  மட்டும் தவெகவிற்கு உடன்பாடு இல்லை என விஜய் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், என் நெஞ்சில் குடி இருக்கும் ஒட்டுமொத்தமான உங்க எல்லாருக்கும் என்னுடைய உயிர் வணக்கங்கள்.ஏற்கனவே இருக்குற அரசியல்வாதிகளை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறது இல்லை.

பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கையை தவெக ஏற்கிறது. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்கப்போகிறோம்.

மதசார்பின்மைக்கும், நேர்மைக்கும் நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பச்சைத் தமிழர் பெருந்தலைவர் காமராஜரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். அடுத்ததாக எங்கள் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் அம்பேத்கர் பெயரைக் கேட்டாலே நடுங்கிப் போய்விடுவார்கள். அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

 மேலும் பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தவெகதான். அந்த வகையில் இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலு நாச்சியார், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் இருவரும் நம்முடைய கொள்கைத் தலைவர்கள் என விஜய் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow