ஆ. ராசா.. கனிமொழி வேட்புமனுக்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. யார் யாருடையது ஏற்பு - முழு விபரம்

மக்களவைத் தேர்தலை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிரபலமான அரசியல் கட்சித்தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக யாருடைய மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

Mar 28, 2024 - 16:19
ஆ. ராசா.. கனிமொழி வேட்புமனுக்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. யார் யாருடையது ஏற்பு - முழு விபரம்

மக்களவைத் தேர்தலை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிரபலமான அரசியல் கட்சித்தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக யாருடைய மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் களம் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே அனல் பறக்கிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. கடைசி நிமிடம் வரைக்கும் பிரபல வேட்பாளர்கள் பலர் பக் பக் மனநிலையிலேயே இருந்தனர்.

சிதம்பரம் தொகுதி:

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர், பாஜக வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசியின் மனு நிராகரிக்கப்பட்டது. அதோடு, ஐந்து சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. 

சிவகங்கை தொகுதி:

திமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக்  சிதம்பரம், அதிமுக வேட்பாளர், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் தேவநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் தொகுதி:

தி.மு.க. வேட்பாளர் முரசொலி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன், ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. பா.ஜ.க, தேமுதிக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

தேனி தொகுதி:

டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிறுத்தி வைக்கப்பட்டது. பிரமாண பத்திரத்தை தாமதமாக பதிவேற்றம் செய்ததாகவும், அதனால் அவரது பிரமாண பத்திரம் மீது  பரிசீலனை செய்வதற்கு 1 மணி நேரம் கால அவகாசம் வேண்டும்  எனவும் கூறி டிடிவி தினகரன் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மதிய உணவு இடைவேளைக்கு கூட போகாமல் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் 3 மணிக்கு மேல் டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ராமநாதபுரம் தொகுதி:

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 42 வேட்பாளர்கள் 56 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டது.  அதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 சுயேட்சை வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

நீலகிரி: 

நீலகிரி மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பியும், வேட்பாளருமான ஆ.ராசாவின் வேட்புமனு இன்று திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. அவருடன் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. காலை முதலே தொடர்ச்சியாக வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்துகொண்டிருக்கும் சூழலில், இருவரது வேட்புமனுக்களும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் சில மணி நேரத்திலேயே இரு மனுக்களும் ஏற்கப்பட்டன.

தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அதிமுகவினர் 2ஜி வழக்கு விசாரணை கோர்ட்டில் மீண்டும் நடப்பதால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கனிமொழி மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி ஏற்றுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே போல மயிலாடுதுறையில் அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow