சென்னையில் நம்ம யாத்ரி.. அனைத்து பணமும் டிரைவர்களுக்கே.. வாக்குறுதி அளித்த ஜஸ்பே
சென்னையில் நம்ம யாத்ரி கார் டாக்ஸி சேவையானது இன்று தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் கொடுக்கக்கூடிய அனைத்து பணமும் ஓட்டுநர்களுக்கு போய் சேரும் என்பது எங்களுடைய முதல் வாக்குறுதி என்று ஜஸ்பே ( நம்ம யாத்ரி) தலைமை வளர்ச்சி அதிகாரி சண்முகவேல் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நம்ம யாத்ரி செயலியில் சென்னைக்கான கார் டாக்ஸி சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியானது இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிஐடியு பொதுச் செயலாளர் வி குப்புசாமி, உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜாஹிர் உசேன், உரிமைக் கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.வெற்றிவேல், புதிய அக்னி சிறகுகள் ஓட்டுனர்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், ஜஸ்பே ( நம்ம யாத்ரி) தலைமை வளர்ச்சி அதிகாரி சண்முகவேல், ஓஎன்டிசி நிறுவனத்தை சேர்ந்த பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி இறுதியில் சென்னையில் நம்ம யாத்ரி கார் டாக்ஸி சேவையானது கொடியை அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இடையில் செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்பே ( நம்ம யாத்ரி) தலைமை வளர்ச்சி அதிகாரி சண்முகவேல் மற்றும் ஓட்டுநர் தொழிற் சங்கத்தினர், நம்ம யாத்ரி பற்றி விளக்கம் அளித்தனர்.
நம்ம யாத்ரி என்பது ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி முன்பதிவு செய்யக்கூடிய ஒரு செயலி. இன்றைய தினம் இந்த செயலிக்கு அனைத்து ஓட்டுநர் தொழிற்சங்கத்தில் இருந்தும் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி மூலம் சென்னைக்கு ஒரு நல்ல வளர்ச்சி கிடைக்கும் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற பகுதிகளிலும் இதனை துவக்கி வைக்க உள்ளோம். இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் கொடுக்கும் அனைத்து ரூபாயும் ஓட்டுனர்கள் போய் சேரும்.
தற்போது இருக்கக்கூடிய சூழலில் கமிஷன் என்ற பெயரில் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வாகனங்களை சரியாக பராமரிக்க முடியவில்லை அதனால் சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இப்படி அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய நம்ம யாத்ரி செயலி உதவியாக இருக்கும் என்று ஜஸ்பே ( நம்ம யாத்ரி) தலைமை வளர்ச்சி அதிகாரி சண்முகவேல் தெரிவித்தார்.
இன்றைய தினம் சென்னையில் பேராதரவுடன் இதனை தொடக்கி வைத்திருப்பதாகவும், மக்களும் ஓட்டுநர்களும் இதற்கு பேர் ஆதரவு தருவார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை என்றும், அக்டோபர் மாதம் வரை ஓட்டுநர்களுக்கு இந்த பிளாட்பார்ம் இலவசமாக இருக்கும் என்றும் சண்முகவேல் கூறினார்.
அக்டோபர் மாதத்திற்கு பிறகு ஒரு நாளுக்கு 45 ரூபாய் செலுத்த வேண்டும் அன்றைய நாள் அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டிக் கொள்ளலாம் வாடிக்கையாளர்கள் கொடுக்கக்கூடிய அனைத்து பணமும் ஓட்டுநர்களுக்கு போய் சேரும் என்பது எங்களுடைய முதல் வாக்குறுதி. தற்போது கட்டணத்தை மாற்ற மாட்டோம், சேவை அதிகரித்தால் அப்போது கலந்து யோசித்து முடிவெடுப்போம்.
போட்டி இருக்கிறது என்பதற்காக தேவை இல்லாமல் கட்டணத்தை காரணம் இல்லாமல் குறைக்க மாட்டோம். ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ப தொழிற் சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்களுடன் கலந்து பேசி குறைந்தபட்ச ஆதார விலையை முதன்முறையாக கொண்டு வந்து இருப்பதாகவும், இது ஓட்டுனர்களுக்கான செயலி என்பதால் இந்த செயலியில் ரத்து செய்யும் அளவு குறைவாக இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் சமமான அளவு பயன் இருப்பதாக ஜஸ்பே ( நம்ம யாத்ரி) தலைமை வளர்ச்சி அதிகாரி சண்முகவேல் தெரிவித்தார்.
ஓட்டுனர்களை தேர்வு செய்யும் பொழுது பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் மற்றும் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்து கொண்டிருப்பதாகவும், வாடிக்கையாளரிடம் இருந்து ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக ஓட்டுனர் மேல் நடவடிக்கை எடுக்காமல் இரு தரப்பையும் நன்கு விசாரிப்பதாகவும் சண்முகவேல் கூறினார்.
சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் மேல் தவறு இருப்பதாகவும், கிட்டதட்ட 99.5 சதவீதம் ஓட்டுனர்கள் நல்ல சேவையை கொடுக்க தான் விரும்புகிறார்கள். ரேட்டிங்கை பொருத்தவரை 4.8, 4.9 இருப்பதாகவும், சில பிரச்சனைகள் இருக்கும் போது அதை நாம் அனைவரும் சேர்ந்து தான் சரி செய்ய வேண்டும் என்று ஜஸ்பே ( நம்ம யாத்ரி) தலைமை வளர்ச்சி அதிகாரி சண்முகவேல் தெரிவித்தார்.
What's Your Reaction?