நெல்லை தாமிரசபையில் நடராஜர் ஆருத்ரா தரிசனம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாிசனம்
ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்நிகழ்ச்சியை கண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான நெல்லை தாமிரசபையில் நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாயங்களுள் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள கோவிலாகும்.இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
சிறப்பாக மாா்கழி மாதத்தில் நடராஜருக்கு நடைபெறும் திருவாதிரை பெருந்திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடராஜா் சன்னதியில் ஹோமங்கள் வளா்த்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதிகாலையில் பெரிய சபாபதி சன்னதியில் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் தாமிர சபையில் சிவபருமான் நடனக்காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. சிவபெருமானின் திருநடனக்காட்சியை காண நெல்லையப்பா் அன்னை காந்திமதி அம்பாள், 63 நாயன்மாா்கள், பாண்டிய மன்னன் ஆகியோா் தாமிர சபை முன் எழுந்தருளினா்.
முதலில் நடராஜா் உடனுறை சிவகாமி அம்பாளுக்கு அதிகாலை 1.00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் தாமிர சபையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் ஸ்ரீ நடராஜருக்கு திருவெம்பாசை பாடல்களை இசையுடன் பாட திருவெம்பாவை தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் - நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது. தாமிர சபை முன் கைலாய வாத்தியங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க வேதங்கள் பாட 11 முறை நடராஜா் திருநடனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்நிகழ்ச்சியை கண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?