தூத்துக்குடி: கவர்னருக்குப் போட்டியாக அமைச்சர் நடத்திய நிகழ்ச்சிகள்!
தனித்திறன் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 
                                உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஸ்னோ ஹாலில் பாரம்பரிய மீனவர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் தூத்துக்குடி மீனவர் சாலை நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், முதலுதவி மையத்தை திறந்து வைத்து, ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
மீனவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் அருகருகே நடந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. ஆனாலும் போலீசார் திறமையாக செயல்பட்டு இரு தரப்பினரையும் ஒருவரை ஒருவர் சந்திக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இரண்டு நிகழ்ச்சிகளும் அமைதியாக நடந்து முடிந்தது.
-எஸ்.அண்ணாதுரை
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            