இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணியுடன் நியுசிலாந்து கிரிகெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடவுள்ள நிலையில் அதற்கான வீரர்களை நியூசிலாந்து அணி அறிவித்திருக்கிறது. 

Oct 10, 2024 - 19:05
இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு
newzeland test cricket team

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி. இத்தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. இந்நிலையில் வங்கதேசத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடர் விளையாடவிருக்கிறது. 

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிற 17  வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் காயத்துக்கு ஆளான  கண்ட கேன் வில்லியம்சன், முதல் டெஸ்ட்டில் இறங்குவாரா என்பது பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது. அவருக்கு மாற்றாக மாா்க் சாப்மேன் நியூசி அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். பேட்டிங் ஆல் ரவுண்டா் மைக்கேல் பிரேஸ்வெல்லும் முதல் டெஸ்ட்டுக்காக மட்டுமே சோ்க்கப்பட்டிருக்கும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணையவிருக்கிறாா். 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபா் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெங்களூரிலும், 2வது டெஸ்ட் அக்டோபா் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை புனேவிலும், 3வது டெஸ்ட் போட்டி நவம்பா் 1ம் தேதி முதல் முதல் 5ம் தேதி வரை மும்பையிலும் நடைபெறவிருக்கின்றன. 

இத்தொடரில் நியூசிலாந்து அணியில் விளையாடவிருப்பவர்கள்: 

டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், மாா்க் சாப்மேன், டெவன் கான்வே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில்லியம் ஓ’ ரூா்கே, அஜாஸ் படேல், கிளென் ஃபிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சேன்ட்னா், பென் சீா்ஸ், இஷ் சோதி, டிம் சௌதி, கேன் வில்லியம்சன், வில் யங். 

இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் நிச்சயம் இத்தொடர் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow