பி.எஸ்.ஜி அணியில் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்கிறாரா எம்பாப்பே?
ஃபிபா உலகக் கோப்பை சாம்பியனும் பிரான்ஸ் அணியில் கால்பந்து கேப்டனுமான கிலியான் எம்பாப்பே பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர் கிலியான் எம்பாப்பே. பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனான இவர், தற்போது யுஇஎஃப்ஏ கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 7 சீசன்களாக பிஎஸ்ஜி அணிக்கு எம்பாப்பே விளையாடி வரும் நிலையில், ரியல் மாட்ரிட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து பிரபல கால்பந்து செய்தியாளர் ஃபாப்ரிஸியோ ரோமானோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே, தான் அணி மாறுவது குறித்து பிஎஸ்ஜி உரிமையாளர் நாசர் அல் கெலாஃபியிடம் தெரிவித்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திர வீரராக (Free agent) இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் இன்னும் முடியாத நிலையில், எம்பாப்பே எப்போது அதிகாரப்பூர்வமாக அணியை விட்டு விலகுவார் என்ற தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை.
ஏற்கனவே ரியல் மாட்ரிட் அணியின் அழைப்பை 2022-ல் எம்பாப்பே மறுத்துள்ள நிலையில், இப்போது மீண்டும் அந்த இணையில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி, ரொனால்டோ ஆகியோருக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் எம்பாப்பே, உலகப் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணியில் இணைய வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விரும்புகின்றனர். ரியல் மாட்ரிட் அணியின் போட்டியாளரான பார்சிலோனா அணியும், எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னர் முயற்சி எடுத்தது.
பார்சிலோனா அணி நிதிச் சிக்கலில் இருந்ததால் அப்போது எம்பாப்பே ஆர்வம் காட்டவில்லை. 2022-ல் எம்பாப்பேக்கு நிர்ணயித்திருந்ததை விட குறைவான தொகைகே இந்த முறை ரியல் மார்டிட் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோ, கார்லோஸ் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடிய பார்சிலோனா அணியில் எம்பாப்பே இணையவுள்ளது கால்பந்தாட்ட உலகில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 சீசன்கள் பிஎஸ்ஜி அணிக்காக விளையடிய எம்பாப்பே, 274 கோல்கள் அடித்துள்ள்ளார்.
What's Your Reaction?