ஹார்முஸ் நீரிணைக்கு புதிய பெயர்.. ஈரானை வம்புக்கு இழுத்த டிரம்ப்..!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Sep 26, 2026 - 16:39
ஹார்முஸ் நீரிணைக்கு புதிய பெயர்.. ஈரானை வம்புக்கு இழுத்த டிரம்ப்..!
Trump Strait

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போர், சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்திற்கு பிறகும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான 'ஹார்முஸ் நீரிணை'யை ஈரான் முடக்கியுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்வதேச எரிசக்தி சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

கடற்படை முற்றுகை மற்றும் எண்ணெய் தடைகளை நீக்கினால், 7 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்மொழிந்தார். ஆனால், இந்த நிபந்தனையை நிராகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைக் கைப்பற்ற முடியாது எனக் கூறி மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணைப் பகுதியை வட்டமிட்டு, அதனை "டிரம்ப் நீரிணை" (Trump Strait) எனக் குறிப்பிட்ட வரைபடம் ஒன்றை டிரம்ப் தனது 'டிரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போதைய கடற்படை முற்றுகை மூலம் அப்பகுதியை அமெரிக்காவே முழுமையாகக் கட்டுப்படுத்துவதால், அதனை அமெரிக்கப் பிராந்தியமாக அறிவிப்பதே நல்ல யோசனை என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow