Google Android: 16 GB மொபைல் .. செக் வைத்தது கூகுள் ஆண்ட்ராய்டு 15
உங்கள் மொபைலில் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் சேவைகளை நீங்கள் பெற புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கூகுள் நிறுவனம். அதில் முக்கியமானது, ஆண்ட்ராய்டில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான குறைந்தப்பட்ச ரேம் (RAM) &கொள்ளளவினை கூகுள் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

பிளே ஸ்டோர் சர்வீஸ்களை ஸ்மார்ட்போனில் பெற தற்போதுள்ள குறைந்தபட்ச ரேம் மற்றும் சேமிப்பிட கொள்ளளவினை அதிகரித்துள்ளது கூகுள். மொபைல் போன் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராய்டு 15 உடன் புதிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய விரும்பினால், அவர்கள் குறைந்தபட்சம் 32 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்தை (32 GB Internal storage) சேர்க்க வேண்டும். 32 GB சேமிப்பிடம் இல்லையென்றால், நீங்கள் கூகுள் மொபைல் சர்வீஸ்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
சேமிப்பு கொள்ளளவினை கூகுள் உயர்த்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக ஆண்ட்ராய்டு 13 வெளியான போது, கூகிள் 8 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பக கொள்ளளவினை 16 ஜிபியாக அதிகரித்தது நினைவிருக்கலாம்.
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் அப்படி உருவாக்கும் உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்தில் (Built-in storage) 75 சதவீதத்தை பயனர் தரவுகளுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் கூகிள் குறிப்பிட்டுள்ளது. இன்று பெரும்பாலான தொடக்க நிலை ஸ்மார்ட்போன்கள் 64 ஜிபி (அல்லது அதற்கு மேற்பட்ட) உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தப்பட்சம் 4 GB அளவிலான ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஆண்ட்ராய்டில் இயங்கும். அதற்கு குறைவான ரேம் கொண்ட கைபேசிகள் ஆண்ட்ராய்டு கோவில் (Android GO) இயங்கும். ஆண்ட்ராய்டு 16 வெளிவரும் போது கூகிள் மீண்டும் குறைந்தபட்ச ரேமின் அளவை 6 ஜிபியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கப்படும் பட்சத்தில் 4 ஜிபி (4 GB) ரேம் கொண்ட ஸ்மார்போன் மொபைல்களும் எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு கோவைப் (Android GO) பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15-ல் இயங்கும் தொலைபேசிகளில் வல்கன் 1.3 (அல்லது புதிய) 3D கிராபிக்ஸ் மற்றும் கம்ப்யூட் API ஐ ஆதரிக்கும் சிப்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என கூகுள் பரிந்துரைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஸ்மார்ட்போன்களில் ஹியரிங் எய்ட் (hearing aid) ஆதரவைச் சேர்க்க கூகிள் பரிந்துரைத்துள்ளது. ப்ளூடூத் 5.0 மற்றும் ஆண்ட்ராய்டு 16 அறிமுகப்படுத்தும் போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களை மொபைல் நிறுவனங்கள் கட்டாயம் உள்ளடக்க கூகுள் நிறுவனம் கூறலாம் என டெக் வல்லூநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
What's Your Reaction?






