ரத்த வெள்ளத்தில் நானி... ‘தி பாரடைஸ்’ எப்படி இருக்கு?

நானியின் அதிரடி ஹீரோயிஸம், ரத்தம் தெறிக்கும் சண்டைகள், இருள் சூழ்ந்த காட்சிகள் என பிரம்மாண்டமாக நகரும் ‘தி பாரடைஸ்’ படம் ரசிகர்களை கவர்கிறதா? என்பதை விரிவாக பார்போம்.

Sep 26, 2026 - 20:00
ரத்த வெள்ளத்தில் நானி... ‘தி பாரடைஸ்’ எப்படி இருக்கு?
Paradise

விமர்சனம், தி பாரடைஸ் 

கதாநாயகன் நானி சிறுவனாக இருக்கும் பொழுது வேசியின் மகன் என்று அவன் கையில் வில்லன் மோகன்பாபு பச்சை குத்தி விடுகிறார்... அதுவும் அவன் அம்மாவின் கண்முன்னே... அவளும் அதை மறுக்கவில்லை. அதனால் தாயை வெறுக்கும் மகன் குழந்தை பருவத்திலேயே கொடூரமானவனாக மாறி கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறான்.
பல வருடங்கள் ஜெயிலில் இருந்துவிட்டு பின்னர் வெளியில் வருகிறான்... வந்த இடத்தில் தன் இனக் குழுவான சவாரி இன மக்கள் தங்களுக்கு அரசாங்கத்தின் அடையாள அட்டை வேண்டும் என்று நானியின் தாயார் தலைமையில் போராடுகிறார்கள்.  அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் முடியும் தான் கதை... இயக்கம் ஸ்ரீகாந்த் ஒடேலா
ஹீரோயிஸம் என்பது இப்பொழுது காட்டுமிராண்டிதனத்தின் உச்சமாக ரசிகர்களால் ரசிக்கப்படுவதால் படம் முழுக்க ரத்தம் ஆறாக ஓடுகிறது, நானியும் இரத்தக் குளியலில் நனைந்து கொண்டே இருக்கிறார். நாயகி கயாடு லோஹர் அழகு. தன் தந்தை பட்ட கடனுக்காக அவர் ஆபாச படங்களில் நடிப்பதும், அதை அவளது அம்மாவே படம் பிடிப்பதும் ஜீரணிப்பது கடினம்.
அகதிகள் முகாம் மாதிரி இருக்கும் அந்த புற நகர் காலனியான பாரடைஸில் எப்பொழுதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது, நெருப்பும் எரிந்து கொண்டே இருக்கிறது. காட்சிகளில் பிரம்மாண்டம் இருந்தாலும் எல்லா காட்சிகளும் ஒரே மாதிரி இருப்பதால், சண்டை காட்சிகளுக்கு மத்தியில் சில நிமிடங்கள் வரும் சென்டிமென்ட் காட்சிகளும் கவனத்தை ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு ஒரே இருட்டு... அனிருத்தின் இசை காதை செவிடாக்கும் இரைச்சல்.
தி பாரடைஸ் - சிவந்த மண்
2 ஸ்டார் 
(இளையரவி)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow