ரூ.651.95 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்...தொடங்கி வைத்த முதலமைச்சர்!
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில் 651.95 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பில் தீயணைப்பு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.15.34 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
அதேபோல், தமிழகத்தில் உள்ள 36 கோயில்களில் ரூ.592.38 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 43 புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினர். விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் 31 கோடி ரூபாய் செலவில், 63,000 சதுர அடியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா, திருச்சி அருகே நாவல்பட்டில் ரூ.59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் கட்டிடங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வுகளின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?