மொழிப்போர் தியாகிகள் தினம் !
ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்டபோராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

மொழிப்போர் தியாகிகள் தினம் எல்லா ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி கடைபிடித்து வருகிறோம். 1937- ஆண்டு காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டது. ஹிந்தி படித்தால் சீக்கிரம் முன்னேறிவிடலாம் என்றும் சொன்னதால் பெரியாரும் நீதிக்கட்சிகளும் கொதித்தெழுந்தனர்.
அதனைத்தொடர்ந்து சமஸ்கிருதம் ஹிந்தி எதிராக பல போராட்டங்கள் நடைப்பெற்றன. இதில் பெரும்பாலான பெண்களும் கலந்துகொண்டனர். தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணன் போன்றோர் காங்கிரசிலேயே இருந்து கொண்டு ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்கள் ஆயினும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார் ராஜாஜி. மேலும் இந்த போராட்டத்தில் பல பெண்கள் குழந்தைகளோடு சிறை சென்றனர். பெண்களை போராட தூண்டியதற்காக பெரியார் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்பு ஆறு மாதத்தில் உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து தனித்தமிழ் இயக்கம் வளர்ந்தது.
போராட்டத்தின் விளைவாக ஹிந்தி திணிப்பு எதிராக பலர் தங்களது இன்னுயிரை நீத்தார்கள். உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவுகூரும் வகையில் ஜன.25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
What's Your Reaction?