ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஜப்பானில் இயங்கி வரும் நிஹோன் ஹிடங்க்யோ என்கிற அமைப்புக்கு இந்த 2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது நோபல் பரிசு. கலை, இலக்கியம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் அற்ற உலகினை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடங்க்யோ என்கிற அமைப்புக்கு இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் உலகை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணு ஆயுதங்களால் ஜப்பான் சந்தித்த இழப்பு மிகக் கொடியது. இரண்டாம் உலகப்போர் முடிந்து 80 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. இப்போதும் ரஷ்ய - உக்ரைன் போர், பாலஸ்தீனம் - இஸ்ரோல் போர் ஆகியவற்றில் அணு ஆயுதங்கள் குறித்த பதற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.
இப்படியாக உலகம் போரை நோக்கிச் செல்வது மனித குலத்துக்கு பேரழிவை விளைவிக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு அணு ஆயுதங்களுக்கு எதிராக செயல்படுவதாலேயே இதற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட குண்டின் விளைவாக ஜப்பானே சிதந்தை நிலையில் அதில் இருந்து மீண்டு வரும் காலத்தில் 1956ம் ஆண்டு இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் அமைதியின் சின்னமாகக் கருதப்படும் சசாகியின் காகிதக் கொக்கை தங்களது லட்சினையாகக் கொண்டு போர் கூடாது என்னும் முழக்கத்தை உலகுக்கு வலியுறுத்துவதை தம் தன் பணியாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
What's Your Reaction?