அரிதான முழு சூரிய கிரகணம் இன்று... அடுத்து 2150-ஆம் ஆண்டு தான் நிகழும்...
இன்று நடக்கவிருக்கும் முழு சூரிய கிரகணம், இனி 2150-ஆம் ஆண்டு தான் நடக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
சூரிய கிரகணம் என்பது, பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வாகும். அப்போது, சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். முழு கிரகணத்தில், சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்து பூமியின் சில பகுதிகள் சிறிது நேரம் இருளில் மூழ்கடிக்கப்படும்.
இன்று நிகழ உள்ள மிகவும் அரிதான முழு சூரிய கிரகணம், இதற்குப் பிறகு 2150 ஆம் ஆண்டு தான் மீண்டும் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறிகின்றனர். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் மட்டுமே இன்றைய சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
2024 ஆம் ஆண்டின் முதல் முதலாக இன்று நிகழும் சூரிய கிரகணம் அதிக நேரம் கிரகணம் நீடிக்கவுள்ளது. இன்றைய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.15 மணிக்கு துவங்கி, முழு கிரகணமாக 10.08 மணியாகும். மேலும், நாளை அதிகாலை 2.22 மணிக்கு முழுமையாக நிறைவடைய உள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பார்க்க முடியாது.
பொதுமக்கள் இந்த நிகழ்வைப் பார்க்க அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு மொத்தமாக இரண்டரை மணி நேரம் நிகழவுள்ளது. இன்று நடக்கும் முழு கிரணத்தின் போது, சந்திரன் 4 நிமிடங்கள் 27 நொடிகள் சூரியனை முழுமையாக மறைக்கும். இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி அமெரிக்க மக்கள் பார்த்த சூரிய கிரகணத்தின் நேரத்தை விட, இன்று நிகழவு இரண்டு மடங்கு நேரம் அதிகமாக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற நாடுகள் இந்த கிரகணத்தைப் பார்க்க, இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 1.30 மணி வரை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, நேரலையாக ஒளிபரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
What's Your Reaction?