இனி இவர் தான் காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர்...இக்கட்டான சூழலில் தலைமை எடுத்த முக்கிய முடிவு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Feb 18, 2024 - 03:13
இனி இவர் தான் காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர்...இக்கட்டான சூழலில் தலைமை எடுத்த முக்கிய முடிவு
இனி இவர் தான் காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர்...இக்கட்டான சூழலில் தலைமை எடுத்த முக்கிய முடிவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்து வந்த கே.எஸ்.அழகிரிக்கு பதில், காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினராக உள்ள செல்வப் பெருந்தகை தலைவராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow