IUML ராமநாதபுரத்திலும், கொ.ம.தே.க. நாமக்கலிலும் போட்டி... திமுக கூட்டணியில் உடன்படிக்கை!!

Feb 24, 2024 - 20:19
IUML ராமநாதபுரத்திலும், கொ.ம.தே.க. நாமக்கலிலும் போட்டி... திமுக கூட்டணியில் உடன்படிக்கை!!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் முதல் கட்டமாக கொங்கு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரத்திலும் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீட்டில் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. 

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொகுதி உடன்படிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி ஏற்கனவே எம்.பியாக உள்ள நவாஸ் கனியே மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுவார் எனவும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து திருச்சியில் பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி அறிவிப்போம் என தெரிவித்த காதர் மொய்தீன், இந்த தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறினார். 

இதேபோல் திமுக கூட்டணியில் பங்கு வகிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க :

https://kumudam.com/BJP-preliminary-list-of-candidates-to-be-released-on-February-29

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow