பி.ஹெச்.டி படிக்க இனி 4 ஆண்டு Bachelor டிகிரி மட்டும் போதும்.. யூஜிசி அதிரடி அறிவிப்பு !
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து உதவி பேராசிரியாரகலாம்.
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பி.ஹெச்.டி படிக்க விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு புதிய மாற்றங்களை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதவி பேராசியிராக பணியாற்றவும், பி.ஹெச்.டி எனும் ஆராய்ச்சி படிப்பில் சேரவும் NET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முதுகலை (master degree) பட்டமும், 55 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சி விகிதம் இருந்தால் மட்டுமே விண்ணபிக்க முடியும் என்ற விதி இருந்தது. ஆனால், அதனை மாற்றி பல்கலைக்கழக மானியக்குழுவான யூஜிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, NET எனப்படும் தேசிய கல்வித்தேர்வுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில், 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து உதவி பேராசிரியாரகலாம். அதே துறையில் முனைவராகும் வகையிலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 55 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்கு பதில் 75 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கூடுதல் விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவிகித மதிப்பெண் தளர்வும் வழங்கப்படும் என்றும் யூஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?