உயிரைப் பறிக்கும் Smoking Biscuit காவு வாங்கும் Liquid Nitrogen? மக்களே உஷார்..
Smoking Biscuit-ஐ உண்ட சிறுவன் கடும் உடல் உபாதையில் துடித்த வீடியோ வெளியான நிலையில், Smoking Biscuit உண்ணத் தகுந்ததா? அதில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் வாயு மனித உயிர்களை காவு வாங்குகிறதா?
Smoke Biscuit-ஐ தனது குடும்பத்தினருடன் சென்று ஆசை ஆசையாய் வாங்கி உண்ட சிறுவன், கடும் வலியால் துடிதுடித்த வீடியோவை இயக்குநர் மோகன்ஜி வெளியிட்டிருந்தார். பின்னர் அந்த சிறுவன் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த Smoking Biscuit அடுத்த புயலைக் கிளப்பியுள்ளது.
ஸ்மோக்கிங் பிஸ்கட் என்பது என்ன?
ஒரு சிலிண்டரில் இருந்து திரவ நைட்ரஜன் எடுக்கப்பட்டு அதனை பிஸ்கட்டில் சேர்த்தால் அதிலிருந்து புகை வரும். அதனை அப்படியே வாயில் போட்டுக்கொண்டால், அப்போதும் வாய் மற்றும் மூக்கில் புகை வரும். குழந்தைகளுக்கு Fun-ஆக தோன்றும் இந்த ஸ்மோக்கிங் பிஸ்கட், சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடக்கும் விழாக்களிலும் விற்கப்படுவதாகத் தெரிகிறது.
திரவ நைட்ரஜனின் பயன்பாடு என்ன?
திரவ நிலையில் கிட்டத்தட்ட மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன், ஸ்மோக்கிங் பிஸ்கட்டில் பயன்படுத்தப்படுவதே ஆபத்துக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையவைக்க 1800-களில் இருந்தே உலகம் முழுவதும் திரவ நைட்ரஜன் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குளிர்பானங்கள், இனிப்புகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றிலும் உணவு பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் Liquid Nitrogen உபயோகப்படுத்தப்படும். கோழி, மீன், பால், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பாஸ்தா, பேக்கரி பொருட்கள் உள்ளிட்டவற்றை குளுமையாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.
திரவ நைட்ரஜன் ஆபத்தா?
உணவுப்பொருட்களை பாதுகாக்க திரவ நைட்ரஜன் எந்தளவுக்கு நன்மையோ, அதே அளவு ஆபத்தும் நிறைந்தது. அதாவது, திரவ நைட்ரஜன் ஒரு நொடியில் எதையும் உறைய வைக்கும் தன்மை கொண்டிருக்கும் நிலையில், அதன் நீராவி தோல் திசுக்களையும் உறைய வைக்கும் இயல்பு கொண்டது. ஆக அதனை சிறிது விழுங்கினாலும் வயிற்றில் Liquid Nitrogen evoparation நடந்து, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி மரணத்துக்கே வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு பேக்கேஜிங் துறையில் பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜன், உணவுப்பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுவது பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், குறைந்த அளவில் கவனமாக பயன்படுத்தப்படும்போது, திரவ நைட்ரஜனால் எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலகப்புகழ்பெற்ற masterchef australia சமையல் நிகழ்ச்சியில், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் Liquid Nitrogen-ஐ போட்டியாளர்கள் கையாள்வதும், நீதிபதிகள் இந்த உணவுகளை தவிர்ப்பதற்கும் ஆபத்து அச்சமே காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, புதிய உணவு வகைகளை சுவைக்கிறோம் என்ற மக்களின் ஆசையால், உயிரிழப்பு நேர்வதைத் தவிர்க்க, இதுபோன்ற உணவுகள் தடை செய்யப்படுவதே தீர்வாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?