இனி ஏடிஎம்களில் .10.20,50 ரூபாய் நோட்டுகளை எடுக்கலாம்: மத்திய புது ஐடியா

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 நோட்டுகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இனி ஏடிஎம்களில் .10.20,50 ரூபாய் நோட்டுகளை எடுக்கலாம்: மத்திய புது ஐடியா
இனி ஏடிஎம்களில் ரூ.10.20,50 நோட்டுகள் எடுக்கலாம்

ஏடிஎம்களிலும் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே மக்களால் எடுக்க முடியும். இதனால்  குறைந்த மதிப்புள்ள பணம் கிடைப்பதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ. 500, 200 போன்ற நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெறும் வகையில் ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் வைக்க திட்டமிட்டுள்ளது. 

தற்போது மும்பையில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறக் கூடிய உள்ளூர் சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, நாட்டின் பிற மாநிலங்களில்  ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் நிறுவ மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கரன்சி மூலம் வர்த்தகம் செய்யும் ஏழை, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் இந்த ஏடிஎம்களை கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow